விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மலேசிய மாணவ,மாணவிகளுக்கு ஆர்.டி.பி. கல்லூரியில சிறப்பு கணினிப் பயிற்சி

மலேசிய மாணவ,மாணவிகளுக்கு ஆர்.டி.பி. கல்லூரியில சிறப்பு கணினிப் பயிற்சி


பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரியில் மலேசியா, கோலாலம்பூரிலுள்ள கஸ்தூரி இண்டர்நேஷனல் கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. மலேசியாவின் கஸ்தூரி இண்டர்நேஷனல் கல்லூரி தனது மாணவ,மாணவிகளுக்கு சிறப்பாகக் கணினி பயிற்சியளிக்கத் திட்டமிட்டு அதற்காக,சிறந்த கல்லூரிகளை ஆய்வு செய்தது.

அப்போது பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரியில் போதுமான கணினி வசதிகள், கட்டுமான வசதிகள், பி.எஸ்.சி., கணினித் துறையில் பாரதிதாசன் பல்கலைக்கழ தேர்வில் தொடர்ந்து 3 ஆண்டுகள் தங்கப் பதக்கம் வென்றது உள்ளிட்ட தகுதிகள் அடிப்படையில் இந்தக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டது.
கல்லூரி மாணவ, மாணவிகள் 18 பேருக்கு 70 நாள்களுக்கு கணினிப் பிரிவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதன், 7 ஏப்ரல், 2010

ராஜகிரி : பாலிடெக்னிக் கல்லூரிகள் விவரம்: இணையதளத்தில் வெளியீடு

ராஜகிரி : பாலிடெக்னிக் கல்லூரிகள் விவரம்: இணையதளத்தில் வெளியீடு


தமிழகத்தில் 383 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்; 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள். மீதமுள்ளவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள். பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர முடியும். எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு முன், அக்கல்லூரியில் உள்ள வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன், மாணவர்கள் நேரடியாக அக்கல்லூரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online