விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

ராஜகிரி நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜகிரி நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஜனவரி, 2011

ராஜகிரியில் ரத்த தான முகாம் -23.01.11

ராஜகிரியில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை-23.01.11 நடைபெற்றது
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ராஜகிரி, பண்டாரவாடை கிளைகள் சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு அமைப்பின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் பி.எம். இம்தியாஸ் தலைமை வகித்தார், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் கே. காதர்மீரான் ராஜகிரி, பண்டாரவாடை கிளைத் தலைவர் ஏ. ஜபருல்லா, கிளைச் செயலர் எம். தாலிப்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் காவல் துறை உதவி ஆய்வாளர் ஆர். ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முகாமைத் தெடக்கி வைத்துப் பேசினார்.

முகாமில் 10 பெண்கள் உள்பட 60 பேர் ரத்த தானம் வழங்கினர். தஞ்சாவூர் காளி ரத்த வங்கி மருத்துவர் ஐ. சண்முகசுந்தரம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ரத்தம் பெற்றனர். முகாமில் கிளைப் பொருளாளர் எம். அப்பாஸ், வழுத்தூர் கிளைப் பொறுப்பாளர் ஏ.டி. அன்சாரி, பகுதிச் செயலர் குலாம், மண்டலத் தலைவர்கள் இலியாஸ், எஸ். அகமதுபரீத், அப்துல்வஹாப், முகமதுஅலி, உதவி மண்டலத் தலைவர் எம்.பி. காதர் ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செவ்வாய், 10 நவம்பர், 2009

ராஜகிரி ஊராட்சி துணைத் தலைவர் தேர்வு

ராஜகிரி ஊராட்சி துணைத் தலைவர் தேர்வு

ராஜகிரி, நவ. 9: ராஜகிரி ஊராட்சி துணைத் தலைவராக 3-வது வார்டு உறுப்பினர் ஏ.கே. அப்துல்ரஷீத் திங்கள்கிழமை ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. ஹாஜாசெரீப், ராஜ்குமார் மற்றும் ராஜகிரி ஜமாத்தார்கள் வாழ்த்தினர்

செவ்வாய், 6 அக்டோபர், 2009

ராஜகிரி முஸ்லிம் சமுதாயத்தினர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்




ராஜகிரி, அக். 4:  ராஜகிரி  முஸ்லிம் சமுதாயத்திற்குச் சொந்தமான இடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


 ராஜகிரி பகுதியில் 160 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான சமுதாய இடம் உள்ளது. இந்த குடும்பங்களில் உள்ளவர்களில் பலர் இறந்துவிட்டனர். ஒரு சிலர் கட்டுப்பாட்டில்தான் இந்த இடம் நிர்வகிக்கப்பட்டு வந்தது

சனி, 26 செப்டம்பர், 2009

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online