திருச்சி-சார்ஜா விமானசேவை ரத்து; பரிசீலிக்க கோரிக்கை
ராஜகிரி: திருச்சி-சார்ஜா விமானசேவை ரத்து; பரிசீலிக்க கோரிக்கை
திருச்சி: "திருச்சியில் இருந்து சார்ஜா விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கை: திருச்சி விமானநிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, கொழும்பு, கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கும், சென்னை, திருவனந்தபுரத்துக்கும் விமானசேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் 25ம் தேதி முதல் திருச்சியில் இருந்து சார்ஜா விமானசேவை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு திருச்சி மற்றும் சுற்றுப்புற மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் திருச்சியில் இருந்து குவைத் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போதைய இந்த அறிவிப்பின் மூலம் திருச்சி புறக்கணிக்கப்படுவதாக அறிகிறோம். திருச்சியின் முக்கியத்துவம் குறையாமல் இருக்க சார்ஜா விமானசேவை ரத்து செய்வதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக