தணிக்கை செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் இன்று முதல் மேல்முறையீடு செய்யலாம்
ராஜகிரி : தணிக்கை செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் இன்று முதல் மேல்முறையீடு செய்யலாம்
வட்ட வழங்கல் அலுவலர்களை தஞ்சாவூர்-94450 00287, திருவையாறு-94450 00288, ஒரத்தநாடு-94450 00292, கும்பகோணம்-94450 00290, பாபநாசம்-94450 00289, திருவிடைமருதூர்-94450 00291, பட்டுக்கோட்டை-94450 00293, பேராவூரணி-94450 00294 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
முகவரி மாற்றம் அல்லது பிற காரணங்களால் தணிக்கை செய்யப்படாத அட்டைதாரர்கள், பொருள் நிறுத்தம் ஆணைய தொடர்பாக முறையீடு செய்ய ஏதுவாக இதுவரை பொருள் பெற்று வந்த நியாயவிலை அங்காடிகளில் முறையீட்டுப் படிவங்கள் பெற்று அப்படிவங்களை பூர்த்தி செய்து அத்துடன் குடும்ப அட்டை நகல், இருப்பிட ஆதாரம் (வாக்காளர் அடையாள அட்டை நகல், வீட்டு வரி ரசீது நகல், ஓட்டுநர் உரிமம் ஏதேனும்) இணைத்து நியாயவிலை அங்காடிகளில் கொடுத்து ஒப்புதல் சீட்டு பெற வேண்டும்.
முறையீட்டு மனுக்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
முறையீட்டு மனுக்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
முறையீட்டு மனு மீது இறுதி ஆணை கிடைக்கும் வரை பொருள்கள் வழங்கப்படும்.
முறையீட்டு மனுக்கள் குறித்து விசாரித்து உரிய முகவரி மாற்றம் செய்து தரப்படும்.
முகவரியில் இல்லாத குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும்.
இதுகுறித்த சந்தேகங்களை 04362-231336 என்ற தொலைபேசியில் தெரிந்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக