வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நாளை தொடக்கம்
ராஜகிரி: வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நாளை தொடக்கம்
ராஜகிரி, டிச. 19: தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.1.2010-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்கள் திருத்தும் பணிக்கு 100 சதவீதம் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை (டிச.21) தொடங்குகிறது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்கள் வீடுதோறும் வந்து வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளவர்களை சேர்த்தல், இறந்தவர்களை நீக்குதல், குடியிருப்பு இல்லாத பெயர்கள் நீக்க தேவையான விவரங்கள் சேகரிக்க உள்ளனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் களப் பணியாளர்களுக்கு ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1.1.2010 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துகொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக