ராஜகிரி : குவைத்தில் வேலை
ராஜகிரி : குவைத் நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார், அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர், அரியலூர் ஆட்சியர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குவைத் நாட்டின் தொலைத் தொடர்புத் துறை திட்டப் பணிகளுக்கு பணியாளர்கள் பெருமளவில் தேவைப் படுகிறார்கள். இந்தப் பணிக்கு 10-ம் வகுப்பு வரையில் படித்து, ஓராண்டு அனுபவம் உள்ள 40 வயதுக்குள்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இலவசமாக விசா, உணவு, விமான டிக்கெட் மற்றும் இலவச தங்கும் வசதியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். மேற்காணும், தகுதி மற்றும் அனுபவத்துக்குள்பட்டவர்கள் தங்களின் விண்ணப்பதுடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு வண்ணப் புகைப்படத்துடன் எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை- 600 020 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விவரங்கள் அறிய 9444690026, 9381800181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்
ஜெய்னுல் ஹூசைன்
குவைத்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக