ராஜகிரி: புதிய கல்லூரிகளை தொடங்கும் முஸ்லீம்களுக்கு நிலத்தை வக்பு வாரியம் வழங்கும்
ராஜகிரி: புதிய கல்லூரிகளை தொடங்கும் முஸ்லீம்களுக்கு நிலத்தை வக்பு வாரியம் வழங்கும்
புதிய கல்லூரிகளை தொடங்கும் முஸ்லீம் சமூகத்தாருக்கு கல்லூரிகள் கட்டுவதற்கான இடத்தை வக்பு வாரியம் வழங்கும் என்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் 2020-ம் ஆண்டுக்குள் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தை தற்போதுள்ள 12.4 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை 700 ஆகவும், கல்லூரிகளின் எண்ணிக்கையை 25 ஆயிரமாகவும் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் அன்மையில் தெரிவித்தார்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய கல்லூரிகளை தொடங்கும் முஸ்லீம் சமூகத்தாருக்கு கல்லூரிகள் கட்டுவதற்கான இடத்தை வக்பு வாரியம் வழங்கும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய கல்லூரிகளை தொடங்கி முஸ்லீம் சமூகத்தை கல்வியில் மேம்பட செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக