ராஜகிரி :காசிமியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமுமுக சார்பில் ரத்த தான முகாம்
ஜூலை 25: ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ரத்த தான முகாம் ஞயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கழகத்தின் மாவட்டத் தலைவர் ஜி. முஹம்மது செல்லப்பா தலைமை வகித்தார். ராஜகிரி பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் என்.ஏ.எம். யூசுப் அலி, தமுமுக ஒன்றியச் செயலர் எம். முஹம்மது சலீம், கிளைச் செயலர் எம். சாகுல் ஹமீது, மனித நேய மக்கள் கட்சி ஒன்றியச் செயலர் ஹச். முஹம்மது காசீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரத்த தான முகாமை தமுமுக மாநிலச் செயலர் ஜெ. ஹாஜாகனி தொடக்கிவைத்துப் பேசினார்.
முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். காளி ரத்த வங்கி மருத்துவர் சண்முகசுந்தரம் மற்றும் குழுவினர் ரத்தம் பெற்றனர்.
இதில் கட்சி நிர்வாகிகள் ஜி. சம்சுதீன், நஜ்முதீன் வாகிதி, எம்.ஆர்.எஸ். முஹம்மது மாலிக், எ. முஹம்மது இத்ரிஸ், டி.ஜி. ஷாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கிளை அமைப்பாளர் எம். பசீர் அஹமது வரவேற்றார். கிளைத் தலைவர் ஜெ. முஸ்தாக் அஹமது நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக