ராஜகிரி: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
ராஜகிரி: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
புதிய மின் கட்டண விகிதத்தை இன்று ஆணையம் அறிவித்தது. அதன் விவரம்...
வீடுகளில் 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் போது ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ. 1 அதிகரித்து ரூ. 5.75 வசூலிக்கப்படும்.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 4.40 ல் இருந்து ரூ. 4.80 அதிகரிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்களுக்கு யூனிட்டுக்கு ரூ4.40ல் இருந்து ரூ.5.50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிசை மற்றும் சிறு ரக தொழிற்சாலைகளுக்கு 1800 யூனிட்டுகள் வரையிலான பயன்பாட்டுக்கு பழைய கட்டணமும், அதற்கு மேல் செல்லும் பட்சத்தில் யூனிட்டுக்கு ரூ. 3.80 ம் விகிதத்திலும் மின்கட்டணம் வசூலிக்கப்படும்.
ஷாப்பிங் காம்ப்ளக்சுகளுக்கும் 1800 யூனிட்டுகளுக்கு மேல் செல்லும் போது ரூ. 5.00 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக