பாபநாசம் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்க இரவு நேர ரோந்து
ஆக. 20: பாபநாசம் காவல் சரகப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், இரவு நேர நோந்துப் பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்படுவர் என்றார் பாபநாசம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார்கிரி (
பாபநாசம் உதவிக் காவல் கண்காணிப்பாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற அவர் மேலும் கூறியது:
பாபநாசம் காவல் சரகப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், இரவு முழுவதும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். கட்டப் பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந்தப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து சீரமைக்கப்படும். நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும். பொதுமக்கள் எப்போது மேண்டுமானாலும் என்னை 94454 94080, 04374-222721 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அனில்குமார்கிரி, பி.டெக் பட்டதாரி. 2007-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் பணியாற்றியுள்ளார். தற்போது, பணியிடை மாறுதலில் பாபநாசத்துக்கு வந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக