சீரழியும் சமுதாயம் சீர் படுமா?
நான் சார்ந்த சமுதாயத்தை உன்னிப்பாக கவணித்து வருபவன் என்ற முறையில்,சமீப காலமாக என் காதுக்கு வரும் தகவல்கள் மிக்க வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது, சீரழிவின் உச்சத்தில் சமுதாய இளம் தலை முறையினரின் நடவடிக்கைகள் இருப்பதாகவே இந்த விஷயங்கள் நம்பப்படுகிறது,
செல் போன் மோகம் தலைவிரித்து ஆடி ஒரு வித பித்த நிலையின் பிரதிபலிப்பாகி வரும் காலம் இது, இதெ செல் போன் பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளது என்பது வேதனையான விஷயம். தவறான விஷயங்களை படம் பிடித்தல், ஆபாச படங்கள் பார்த்தல், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புதல்,செல்போன் சில்மிஷங்களில் ஈடுபடுதல் போன்றவற்றால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது
கடந்த வாரம் மனம் பதற வைக்கும் அந்த ஆடியோ கிளிப்பை கேட்டதன் விளைவாக, தூக்கம் தொலைத்து இந்த பதிவை இடும் துர்பாக்கிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தால் அந்த ஆடியோ கிளிப்பில் இடம் பெற்ற கான்வேர்ஷேசனின் ஆபாசத்தை நீங்கள் ஓரளவு உணரலாம்.
கடின உழைப்பாலும், சமூக கட்டுப்பாடுகளாலும்,இனிய உறவு முறையாலும், வாய்மையிலும், வாழ்ந்து காட்டிதலையும் உரமாக்கி உயர்ந்த சமுதாய அரனை தகர்த்தெடுக்க சில விஷமிகள் முயன்று வருவதை விவேகத்துடன் அணுகா விடில் சீரழிவை மொத்தமாக அறுவடை செய்ய வேன்டியதுதான்.
இளம் தலை முறையினர் மார்க்க, அறிவியல், கலை கல்விகளில் சிறந்து விளங்கினாலும், எதார்த்த வாழ்க்கை கல்வியில் தேர்வு பெறாமலெயே இளம் வயதிலேயே தன் பாதையில் விஷச் செடிகளுக்கு நீர் வார்க்கும் செயலுக்கு தனனை அறியாமலே இடம் கொடுத்து விடுவது மிகக் கொடூரமான விஷயம்.
இன்றைய இளம் தலை முறையில் சமூக மதிப்புகள் வீழ்ச்சி அடைந்து சில ஆட்டொ டிரைவர்களும், மாருதி கார் ஒட்டும் சில சமூக விரோதிகளும் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உணரப்பட்டு, இத்தகைய கபோதிகளின் பக்குவப்பாடாத வசீகர பேச்சிற்கும், ஆபாசம் கல்ந்த சிறு மிரட்டல்களுக்கும், உரிமயுடையவன் போன்று பேசும் உள்ளூர் மொழி வழக்கிற்கும் கட்டுப்பட்டு,
ஒரு பேதமை நிலையில் இதனை விரும்பி கேட்கும் ஒரு போதை நோயாளியின் மன நிலையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் இளம் தலை முறையினரை இது போன்ற சிக்கலில் இருந்து மீட்டெடுக்கும் வழியிலும் சமூக கட்டமைப்புகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்காவிடில் எம் இளைய தலமுறையினரின் எதிர்கால வாழ்வு கேளிவிக்குறியதாகிவிடும் என்பது தெளிவான் உணமை.
இந்த விஷயத்தில் பெற்றோர்களுடன், ஆசிரியர்களும், சமூக ஆர்வளர்களும், ஆன்மீக போதகர்களும், அரசும் சேர்ந்து ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபது மிக அவசியாமான ஒன்று.
அளவுக்கு அதிகமான பாசமும், அதீத கண்டிப்பும், வாழக்கை கல்வியினை படிப்பிப்பதின் குறைபாடும், சமூக அக்கரையின்மையும், கலாச்சார மோகமும், அபரீத பண புழக்கம், மட்டரக மீடியா பொழுது போக்கு விஷயங்களும், அன்னிய ஆண்களூடான பழக்க வழக்கங்கள், செல் போன் மோகமும், சமூக நீதி,பண்பாடு, ஒழுக்க , விஷயங்களில் அறிவின்மையும், பெற்றோர்களின் கண்கானிப்பு குறைவு, என களை எடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு.
கோழிக்கோடு ஐஸ்க்ரீம் பார்லர் சம்பவம் போன்று ஒன்று நடை பெறும் முன் விழித்தெழுமா சமூகம்?
Thanks : சோனகன்
1 கருத்துகள்:
சகோ சோனகன் சொல்வது முற்றிலும் உண்மை. விழித்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் விழித்துக் கொள்ள விட்டால் எப்போதுமே இருள் தான்
கருத்துரையிடுக