ராஜகிரி :மின்சார கட்டண உயர்வு- அரசு அறிவிப்பு
ராஜகிரி: மின்சார கட்டண உயர்வு- அரசு அறிவிப்பு
சென்னை :"வணிக மற்றும் வீட்டு மின் இணைப்பு வைத்துள்ளவர்களில், இரு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண உயர்வு கிடையாது' என, மின்வாரியம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால், மாதம் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர், "ஷாக்' அடைந்துள்ளனர். அத்தியாவசிய மின்சாதனப் பொருட்கள் வைத்திருப்போர், இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் பேரில், ஒரு கோடியே, 38 லட்சம் பேர் வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர்.
அவர்களில், இரண்டு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோர், ஒரு கோடியே 20 லட்சம் பேர்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் வாரியம் விடுத்துள்ள கோரிக்கையில், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை வீடுகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படுவதாகத் தெரிவிக்கவில்லை.
எனவே, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும், ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு தற்போது உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வால் எந்த பாதிப்பும் கிடையாது.
இரண்டு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் 18 லட்சம் பேர் மட்டுமே, வாரியம் உத்தேசித்துள்ள குறைந்த பட்சக் கட்டண உயர்வை ஏற்க நேரிடும். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை,
இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோரும்,வணிக நிறுவனங்களில் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கும், கட்டணத்தில் எந்தவிதமான உயர்வும் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் புது உத்தரவுப் படி பார்த்தால், ஒரு மின்விசிறி, "டிவி', பிரிட்ஜ் வைத்திருப்போர் கூட, அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள், "ஷாக்' அடைந்துள்ளனர்.
பெட்ரோல் விலை ஏற்றம் இல்லை என்று அறிவித்து விட்டு - மின்சார கட்டணத்தை உயர்த்தி சாமார்த்தியமாக சரிகட்டுகிறது அரசு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக