ராஜகிரி :செளதி விசா பெற இனி போலீஸ் சான்றிதழ் கட்டாயம்
ராஜகிரி :செளதி விசா பெற இனி போலீஸ் சான்றிதழ் கட்டாயம்
ரியாத்: செளதி அரேபியாவி பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் இனி போலீஸ் சான்றிதழை தாக்கல் செய்தால் மட்டுமே விசா பெற முடியும். இந்த புதிய கட்டுப்பாட்டை செளதி அறிமுகப்படுத்தியுள்ளது.
பாஸ்போர்ட்டுடன் இனி இந்த சான்றிதழை தாக்கல் செய்தால் மட்டுமே விசா வழங்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள செளதி தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த புதிய முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மும்பையில் உள்ள செளதி துணைத் தூதரகம் தினமும் 4,000 பேருக்கு விசாக்களை வழங்குகிறது. டெல்லியில் உள்ள தூதரகம் 800 பேருக்கு சராசரியாக தினமும் விசா வழங்குகிறது.
போலீஸார் வழங்கும் இந்த சான்றிதழில் தொழில் வர்த்தக சபையும் கூடுதலாக கையெழுத்திட வேண்டும் இவற்றுடன் தூதரகங்களில் உள்ள செளதி வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கையெழுத்திடுவார்களாம்.
இந்திய-செளதி ஆகிய இரு நாடுகளின் ஒப்புதலோடு இந்த ய புதிய விதிமுறையை செளதி அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் செளதியில் பணியாற்றும் இந்தியர்களில் குற்றவாளிகள் எவரும் இல்லாத சூழலை ஏற்படுத்த முடியும் என அந் நாடு நம்புகிறது.
கடந்த வாரம்தான் இந்தியாவும், செளதி அரேபியாவும் குற்றவாளிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக