எல்.ஐ.சி.யில் மாணவர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
எல்.ஐ.சி.யில் மாணவர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
எல்.ஐ.சி.யில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மாணவர் உதவித் தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் கோட்ட முதுநிலை மேலாளர் ப. இசக்கிராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எல்.ஐ.சி.யின் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை நிறுவப்பட்டு, அதன்மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் தலா 500 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா
10,000 வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் எல்.ஐ.சி. கோட்டத்தின் கீழ் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலிருந்து தலா ஐந்து மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்கு தகுதியாக 2009-10 ஆம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம்
60,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்கல்வி பயிலும் மாணவர்கள் இணையதளத்தின் வழியாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் கோட்ட அலுவலக மேலாளரை 04362-277825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக