விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

சனி, 23 அக்டோபர், 2010

இன்றைய கண்டுபிடிப்புகள்

கண்டுபிடிப்பு - 1 - ப்ளூம் பாக்ஸ்

k.a. sridhar
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,

அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ்லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையானஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர்.அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி,அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால்என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகிவெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கிஇருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
commercial bloom box

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப்,அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர்தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரியதொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம் அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக்கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்''என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக்காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில்கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும்400 கிலோ வாட் மின்சாரமும் அதன்

ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்றபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒருபாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட,அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில்உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி : மின்னஞ்சல் மூலம் சகோதரர் தாவுத் ரஹ்மான்.

நம்மாலு அமெரிக்காலத்தான் கலக்குறான்னு பார்த்தா, நம்ம எரவாஞ்சேரியிலியும் கலக்குறான். 

கண்டுபிடிப்பு - 2 - தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்! எருமைப்பட்டி குளத்தில் முஹம்மது தவ்ஃபீக் சாதனை!

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்த 22 வயதான முஹம்மது தஃபீக் அலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பபை இந்த ஆண்டு முடித்துள்ளார். இறுதி ஆண்டு படிப்பிற்காக ஒரு ப்ராஜக்ட் செய்ய நினைத்த முஹம்மது தஃபீக் அதை ஒரு சாதனையாக செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.

தரையிலும் தண்ணீரிலும் ஒடும் பஸ் மற்றும் சைக்கிள்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடான அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கின்றது. எனவே‘எரவாஞ்சேரியில் இருக்கும் நாம் புதுமையாக தண்ணீரிலும் தரையிலும் ஓடும் ஸ்கூட்டரை தயாரிப்போம்’ என முடிவு செய்த முஹம்மது தவ்ஃபீக் 6 மாத காலத்தில் தனது இந்த கனவை நினைவாக்கி தற்போது சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு சொந்தான M80 பைக்கை வைத்து இந்த புதிய கண்டுபிடிப்பை அவர் தயாரித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆன செலவு ரூபாய் 6 ஆயிரம் மட்டும் தான்! தண்ணீரில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை தரையிலும் ஓட்டிக் கொள்ளலாம்.

தனது கண்டுபிடிப்பை எருமைப்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட்டிக்காட்னார் முஹம்மது தஃபீக்! இவரது இந்த கண்டு பிடிப்பை பற்றிய செய்தி சன்நியுஸ், கலைஞர் போன்ற அனைத்து
தொலைக்காட்சிகளிலும் மற்றும் தினகரன் தினதந்தி போன்ற அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது குறிப்பிடதக்கது.

இவரது இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ‘நம்ம ஊர்ல இருந்துகிட்டு என்னத்த செய்யமுடியும் என தங்களது இயலாமைக்கு வேறு பெயர் சூட்டிக் கொள்ளாமல் சாதனை செய்ய பணமோ வசதியோ நாம் வசிக்கும் ஊரோ ஒரு தடை அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும். முஹம்மது தஃபீக் அப்படி நினைத்திருந்தால் அவரது இந்த கண்டுபிடிப்பு வெளிவந்திருக்காது. தண்ணிடம் இருந்த பழைய பைக், வெறும் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அருகில் உள்ள குளம், இதுவே முஹம்மது தஃபீக் சாதனைக்கு போதுமானதாக இருந்துள்ளது.

தனது இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளதாக முஹம்மது தஃபீக் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

நமது சமுதாய மாணவர்களின் இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும்.

நன்றி : ததஜ இணையதளம்

கண்டுபிடிப்பு 3 - கண்டு கொள்ளப் படாத கண்டுபிடிப்பாளர் அப்துல் மஜீத் கவ்ஸ்.

இலங்கை தவ்ஹீத் சகோதரரின் உலக சாதனை. வீடியோ ஆதாரத்துடன்.
smallest bike
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)

திருமறைக் குர்ஆனை யார் படித்து சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

நம்முடைய இந்த காலகட்டத்தில் நம் கண்முன் இருக்கும் ஜப்பான் சீனா இந்தியா போன்ற நாடுகளின் மோட்டார் வண்டிகள் அனைத்தையும் விட மிகச் சிரிய மோட்டார் வண்டியை இவர்தான் வடிவமைத்துள்ளார்.

உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் வண்டியொன்றை இந்தியாவைச் சேர்த்த ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தனது நண்பர் மூலம் அறிந்து கொண்ட கவ்ஸ் அவர்கள் செய்தி அறிந்து சரியாக ஒன்பது மாதங்களில் 9 அங்குல மோட்டார் வண்டியை கண்டுபிடித்தார்
brother majid in smallest bike
இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்ட மோட்டார் வண்டி 12 அங்குலம் உடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


கவ்ஸ் அவர்கள் கண்டுபிடித்த மோட்டார் வண்டியின் சிறப்பம்சங்கள்.

நமது வீடுகளில் அன்றாடம் நாம் பயண்படுத்தும் பொருட்களை வைத்தே இந்த சிரிய மோட்டார் வண்டியின் 40 வீதமான பாகங்களை கவ்ஸ் அவர்கள் வடிவமைத்துள்ளார்.

அத்துடன் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் இந்த மோட்டார் வண்டிக்கு மற்ற மோட்டார் வண்டிகளுக்கு உள்ளதைப் போன்ற செஸி என்ற பகுதி இல்லை என்பதுதான்.

மோட்டார் வண்டியைப் பொருத்தவரை மனிதனுக்கு முதுகெழும்பு எவ்வளவு முக்கிமோ அந்தளவுக்கு மோட்டார் வண்டிக்கு செஸி என்ற பகுதி முக்கியமாகும்.

செஸி இல்லாவிடில் மோட்டார் வண்டி இல்லை என்ற கருத்தை பொய்யாக்கி செஸி இல்லாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியும் என தன்னுடைய கண்டு பிடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார் கவ்ஸ்.

சகோதரர் அப்துல் மஜீத் கவ்ஸ் அவர்கள் தான் கண்டுபிடித்த மோட்டார் வண்டிக்கு வைத்துள்ள பெயர் Taprabane saying.. gift from allah to srilanka

இந்த மோட்டார் வண்டி 9 அங்குலம் உயரமும் 2.5 அடி நீளமும் கொண்டதாகும்.
அத்துடன் இந்த மோட்டார் வண்டி கைப் பையினுல் போட்டு செல்லும் வகையில் வெரும் 23 கிலோ கிராம் மாத்திரம் எடை கொண்டதாகும்.

வண்டி தொடர்பான இன்னும் சில குறிப்புகள்.

Speed 35-40 km/h

Fuel - 1 bottle (petrol + oil)

Engine capacity - 50cc

Gear - centrifugal

சகோதரர் கவுஸின் சில சாதனைகள்

பூமியதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் கருவி

காட்டு யானையை விரட்டும் கருவி

ஓட்டுனரின் வேலையை செய்யும் (முச்சக்கரவண்டி) ஆட்டோ

காற்றினால் இயங்கும் இன்ஜின்

திடீர் தீ விபத்திற்கான தீர்வு

காற்சட்டைப் பைக்குள் இட்டுச் செல்லும் சைக்கிள்

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே!

அப்துல் மஜீத் கவ்ஸ் போன்றவர்கள் நமது சமுதாயத்தின் அறிவியல் சிற்பிகள் இவர் போன்றவர்களின் கண்டுபிடிப்புத்தான் அறிவியலின் எதிர்காலம்.

ஆதலால் வீனான தொலைக்காட்டி நிகழ்ச்சிகளுக்கும் கேளிக்கை விளையாட்டுக்களுக்கும் தங்கள் பணங்களை வாரி வழங்கும் தனவந்தர்களே இவரைப் போன்ற கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப் படுத்துவதின் மூலம் நமது சமுதாயத்தை வளர்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முன்வருவோமாக.

நன்றி : ரஸ்மின் இணையதளம்

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online