ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு துபையில் வேலைவாய்ப்பு
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு துபையில் வேலைவாய்ப்பு
தஞ்சாவூர், நவ. 2: துபையிலுள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ. கல்வித் தகுதியுடன் கேபிளிங் மற்றும் டெர்மினேஷன் பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் முன்அனுபவமுள்ள எலக்ட்ரீஷியன்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள் என்று தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பா. முருகேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மனுதாரர்களுக்கு ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை தகுதிக்கேற்ப மாத ஊதியத்துடன் விசா, விமான பயணச்சீட்டு, உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலையளிப்போரால் இலவசமாக வழங்கப்படும்.
இந்தப் பணிக்கு தகுதியுடைய மனுதாரர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, முன்அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன்5 புகைப்படங்களையும் இணைத்து எண்-48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நவம்பர் 8-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டும் நவம்பர் 9-ம் தேதி வெளிநாட்டு வேலையளிப்போரால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044-24464269, 24467562, 9940276356, 9940393617 ஆகிய தொலைபேசி, செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக