விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

கல்வி உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜூன், 2011

ஜாதி வாரி கணக்கெடுப்பு - முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு

ஜாதி வாரி கணக்கெடுப்பு – முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு!
 
தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிசம்பர் மாதம் வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அதில் “மதம்” என்ற கேள்விக்கு “இஸ்லாம்” என்று குறிப்பிடவும். “முஸ்லிம்” என்பது பதிவது தவறு.

இன்னும் “ஜாதி” என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்.

லெப்பை , ஸெய்யது, தக்கனி முஸ்லிம், அன்ஸார், ஷேக், மாப்பிள்ளை, துத்திகோலா
 முக்கிய குறிப்பு:

ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் “லெப்பை” என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது “ஸாயிபு,


பட்டாணி, ஷரீப், பரிமா” என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம்


(நாட்டாண்மை &பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.


திங்கள், 30 மே, 2011

சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசு அளித்துள்ள உதவிகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசு அளித்துள்ள உதவிகள்

இஸ்லாமிய மாணவர்களுக்கு பள்ளயில் படிபதற்கும் மேலும் பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அரசு பல உதவி தொகை அறிவித்துள்ளது. பள்ளி படிப்பிற்கு தேவையான படிவங்களும் , மேலும் படிவங்களை அரசுக்கு அனுப்ப வேண்டிய முறைகளும் கீழே இணைத்துள்ளேன்

http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

http://www.tn.gov.in/bcmbcmw/documents/minorities_Prematric/prematric_advt_2011_12.pdf

http://www.tn.gov.in/bcmbcmw/documents/minorities_postmatric/postmatric_advt_2011_12.pdf

http://www.tn.gov.in/bcmbcmw/documents/minorities_MCM/Advt_MCM_2011_12.pdf

http://www.tn.gov.in/bcmbcmw/forms/prematric_fresh_appl.pdf






புதன், 2 மார்ச், 2011

பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை -2011

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது.


பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை -2011


02-03-2011 தேதி தமிழ் முதல் தாள்

03-03-2011 ந் தேதி தமிழ் இரண்டாம் தாள்

07-03-2011 ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்

08-03-2011 ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்

11-03-2011 ந் தேதி இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

14-03-2011 ந் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து

17-03-2011 ந் தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

18-03-2011 ந் தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

21-03-2011 ந் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்

23-03-2011 ந் தேதி தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்

28-03-2011 ந் தேதி அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தமிழக அரசி2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது.இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :


* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்


* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்


* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது


* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது


பயன்கள் :


* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்


* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்


* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு


* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்


* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

சனி, 23 அக்டோபர், 2010

எல்.ஐ.சி.யில் மாணவர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

எல்.ஐ.சி.யில் மாணவர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

எல்.ஐ.சி.யில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மாணவர் உதவித் தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் கோட்ட முதுநிலை மேலாளர் ப. இசக்கிராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எல்.ஐ.சி.யின் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை நிறுவப்பட்டு, அதன்மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் தலா 500 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா
10,000 வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் எல்.ஐ.சி. கோட்டத்தின் கீழ் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலிருந்து தலா ஐந்து மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்கு தகுதியாக 2009-10 ஆம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம்
60,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்கல்வி பயிலும் மாணவர்கள் இணையதளத்தின் வழியாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் கோட்ட அலுவலக மேலாளரை 04362-277825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ராஜகிரி: சிறுபான்மை மாணவிகளுக்கு நிதி உதவி

மவுலானா ஆசாத் சிறுபான்மை மாணவிகளுக்கு நிதி உதவி

மத்திய அரசு சிறுபான்மையின மக்களில் ஏழை பெண் குழந்தைகள் படிக்க வேண்டி மவுலானா ஆசாத் பெயரில் மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.


இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் சிறுபான்மையின மாணவிகள் 692 பேருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது.

இதில் இஸ்லாம்யியர்கள் 330 பேருக்கும், கிருஸ்துவர்கள் 360 பேருக்கும், சீக்கியர்-1, புத்தமதத்தினர்-1 என மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி 10ம் வகுப்பில் 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற சிறுபான்மயினத்தைச் சார்ந்த மாணவிகள் இந்த நிதியுதவி பெற விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

இதற்கான விண்ணப்பிப்ப படிவம் http://www.maef.nic.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப படிவம் உள்ளது.

இதற்கு விண்ணப்படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி நாள் 20.8.2010.

செவ்வாய், 22 ஜூன், 2010

ராஜகிரி :ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் மென்பொருள் அகராதி

ராஜகிரி :ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் மென்பொருள் அகராதி

உங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வார்த்தைக்கும் அதற்கான அர்த்தம் தெரியுமா? (நமக்கு சில தமிழ் வார்த்தைக்கான அர்த்தம் கூட தெரியாது. அது வேற விஷயம்). நாம் செல்லும் இடமெல்லாம் Oxford or Lifco Dictionary-ஐ கொண்டு செல்ல இயலாது. இன்றைய கணினி, இணைய தொழில்நுட்ப உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன.

திங்கள், 21 ஜூன், 2010

ராஜகிரி :தமிழக அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவி

ராஜகிரி : தவற விடாதீர் தமிழக அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவி


தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .

இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :


* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்


* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்


* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது


* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online