விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2011

துன்பக்கடலில் ஜப்பான்!

துன்பக்கடலில் ஜப்பான்!

இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இணையானது இப்போது நிலநடுக்கத்தாலும் ஆழிப்பேரலையாலும், அணுஉலை வெடிப்புகளாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இதை ஜப்பான் பிரதமரே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய துன்பக்கடலில் மிதக்கிறது ஜப்பான்.


ஜப்பானில் நிலநடுக்கம் என்பது புதிதல்ல. அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னை. இதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு ஜப்பானியரும் பள்ளிக்கூடத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறார்.

எப்படி உணர்ந்துகொண்டு, எப்படிப் பாதுகாப்பாகப் பதுங்குவது என்பதெல்லாம் அந்த நாட்டில் குழந்தைகளும் அறிந்த விஷயம். நிலநடுக்கத்தால் வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து சரிந்ததாகச் செய்திகள் இல்லை.

ஒவ்வொரு கட்டடமும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை. ஆகையால்தான், ஆழிப்பேரலையில் பாதுகாப்புக்காக பலமாடிக் கட்டடத்தின் உச்சியில் நிற்பவர்கள், தங்கள் கட்டடம் கீழே முழுமையாக ஆழிப்பேரலையால் சேதமடைய, அவர்கள் மேலே அப்படியே பாதுகாப்பாக நிற்பதைப் பல தொலைக்காட்சிகளில் காண முடிகிறது.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ராஜகிரி : சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து வராது-விஞ்ஞானிகள்

ராஜகிரி : சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து வராது-விஞ்ஞானிகள்

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் படர்ந்துள்ளது. ஆனால் பயப்படத் தேவையில்லை என்று பல்வேறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ் Two Big Bangs Created the Universe என்ற தலைப்பில் கடந்த 2003ல் ஒரு நூலை வெளியிட்டார். இதை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெகுவாகப் பாராட்டினார்.

அந்த நூலில், 2006க்கும் 2010ம் ஆண்டுக்கும் இடையே சூரியனிலிருந்து வெப்பக் கதிர்கள் பெருமளவில் பூமியை நோக்கி வரும் என்று கணித்துக் கூறியிருந்தார். தற்போது கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று தொடங்கியுள்ளது. இவரை பிரெஞ்சு ஞானி நாஸ்டர்டாமுடன் ஒப்பிட்டுப் பல நூல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பல்தேவ் கூறுகையில், நான் அன்று கூறியதைப் போன்ற நிகழ்வுதான் தற்போது நடந்து வருகிறது. தற்போது நடந்து கொண்டிருப்பதற்கு பெயர் coronal mass ejection என்பதாகும். இது நேரடியாக பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை சோலார் சுனாமி என்றும் அழைக்கலாம். விண்வெளியில் பூமியிலிருந்து 93 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இது நடந்து கொண்டிருக்கிறது.
சூரியனின் ஒரு புள்ளியில், பூமியைப் போல அல்லது பூமியை விட சற்று பெரிதான அளவில் ஏற்பட்டுள்ள வெடிப்பே இதற்குக் காரணம். இது நிச்சயம் மிக ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. வழக்கமாக வெளியாகும் வெப்பக் கதிர்களை விட தற்போது மிகப் பெரிய அளவில் வெப்பக் கதிர்கள் வெளியாக இந்த வெடிப்பே காரணம்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

ராஜகிரி :வருகிறது 'சோலார் சுனாமி'!

ராஜகிரி :வருகிறது 'சோலார் சுனாமி'!

சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன.


'சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது.

அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி நமக்கு சூரிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்த போட்டான் கதிர்கள் சூரியனின் மையப் பகுதியில் இருந்து அதன் வெளிப்பகுதிக்கு வரவே 10,000 முதல் 1.7 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும்.

(போட்டானுடன் கூடவே வெளியேறும் இன்னொரு சூரிய துகள் நியூட்ரினோ. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது விஷயத்துக்கு வருவோம்.)

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online