விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜனவரி, 2011

குறட்டையை தடுக்க வழிகள்

குறட்டையை தடுக்க வழிகள்
 நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.



ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

வியாழன், 20 மே, 2010

ராஜகிரி :வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

ராஜகிரி :வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகக் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது என்று வேர்க்கடலையைப் பற்றி கவிஞர் ஒருவர் பாடி வைத்தார். காந்தி தாத்தா தினம் கொறித்தது, கடலை என்பது மிகவும் பிரபல்யம்.


கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

திங்கள், 30 நவம்பர், 2009

M.B.B.S./ B.D.S அகில இந்தியத் தேர்வு‏

ராஜகிரி   :  தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கச் செய்தி மடல்:

M.B.B.S./ B.D.S. அகில இந்தியத் தேர்வு!

இந்தியாவிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் M.B.B.S / B.D.S. படிப்பில் சேர்க்கை ( 2010-2011 )
பெறுவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு +2 தேறியவர்களும், இந்த ஆண்டு +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ண்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 04-12-2009.

ஆரம்பத் தேர்வு நடைபெறும் நாள்: 03-04-2010
இறுதுத் தேர்வு நடைபெறும் நாள் : 16-05-2010

Online-ல் விண்ணப்பிக்கவும் விவரங்கள் அறிய

இணைய தளம்: http://www.aipmt.nic.in/

கீழ்க்கண்ட CANARA BANK கிளைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்:

சென்னை - அண்ணா சாலை, மயிலாப்பூர், தி.நகர், திருவல்லிக்கேணி
சேலம் - கோட்டை மெயின் ரோடு
திருச்சி- தெப்பக்குளம்
கோவை- ஒப்பணக்காரத் தெரு
மதுரை- மேற்கு பெருமாள் மேஸ்திரி தெரு
ஊட்டி- கமர்ஷியல் தெரு
நாகர்கோயில்- காலேஜ் ரோடு
திண்டுக்கல்- சாலை ரோடு
கும்பகோணம்- கடை வீதி

அன்பு கூர்ந்து இந்தச் செய்தியை Biology, Zoology & Botany பிரிவு எடுத்து வரும் மார்ச்-2010ல் தேர்வு எழுத உள்ள +2 மாணவ- மாணவியருக்குத் தெரியப்படுத்தி உதவுக.


பேராசிரியர், டாக்டர்
சேமுமு.முகமதலி
பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்..

திங்கள், 19 அக்டோபர், 2009

புற்று நோய் எமன் அல்ல

ராஜகிரி : புற்று நோய் எமன் அல்ல

மனித சமுதாயத்தைப் பெதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு - எய்ட்ஸ் மற்றும் புற்று நோய். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன.

இந்த ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.

எனினும், பெரும்பாலான மக்களிடையே, புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நோயைப் பற்றி முழு விவரங்களையும் அறிந்துகொண்டால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.

புற்றுநோய் என்பது, உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற, அபமிதமான வளர்ச்சி நிலையாகும். புற்றுநோய், கட்டியாகவும் இருக்கலாம். அல்லது ஆறாத புண்ணாகவும் இருக்கலாம்.
தலை முதல் கால் வரை...: புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம். இருப்பினும், தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது.

அபாய அறிகுறிகள் என்ன? நாள்பட்ட ஆறாத புண், மார்பகம் அல்லது வேறு உறுப்புகளில் வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி, மச்சத்தின் நிறம் அல்லது உரு மாற்றம், நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம், உணவு உண்ணுவதில் தடை, உடலில் எந்தப் பகுதியிலாவது நீர் அல்லது ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழித்தல் போன்ற வழக்கங்களில் மாற்றம் ஆகியவை புற்று நோயின் ஏழு அபாய அறிகுறிகளாகும்.

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online