விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ராஜகிரியில் மீலாது விழா

பாபநாசம், ஜூலை 15: பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி காயிதேமில்லத் அரங்கில் மீலாது விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு ராஜகிரி பெரியபள்ளி அறக்கட்டளையைச் சேர்ந்த பி.எம். குலாம் மைதீன் தலைமை வகித்தார். துணை இமாம் கே.எஸ். அபூபக்கர்சித்தீக் கிராஅத் ஓதினார்.


பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் பி.ஏ. முஹம்மதுபாரூக், என்.ஏ. அப்துல் லத்தீப் மிஸ்பாஹி, எம்.ஏ. முகம்மது பாரூக், இடிகே முகம்மது பாரூக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்வில், ஏ.எம். இஸ்மாயில் மஹைதீன், எம்.எம். ஷாஹூல் ஹமீது, கே.ஏ. அப்துல்பாஸித், அரபி கல்லூரி முதல்வர் எஸ்.ஏ. அப்துல் ஹகீம் அன்வாரி, ஏ. அம்ருத்தீன், 


பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. துரைக்கண்ணு, முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் கோ. தாமரைச்செல்வன், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் முனைவர் அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் பேசினர்.


காசிமியா அரபிக் கல்லூரி முதல்வர் சர்புதீன் நிகழ்வுகளைத் தொகுத்தார்.

 பெரிய பள்ளிவாசல் தலைவர் என்.ஏ.எம். யூசுப் அலி வரவேற்றார். துணைச் செயலர் ஆர்.ஹச். முகம்மது காசீம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online