விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

திங்கள், 26 ஜூலை, 2010

ராஜகிரி :காசிமியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமுமுக சார்பில் ரத்த தான முகாம்

ஜூலை 25:​  ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில்,​​ ரத்த தான முகாம் ஞயிற்றுக்கிழமை ​ நடைபெற்றது.


​ ​ ​ ​ முகாமுக்கு கழகத்தின் மாவட்டத் தலைவர் ஜி.​ முஹம்மது செல்லப்பா தலைமை ​ வகித்தார்.​ ராஜகிரி பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் என்.ஏ.எம்.​ யூசுப் அலி,​​ தமுமுக ஒன்றியச் செயலர் எம்.​ முஹம்மது சலீம்,​​ கிளைச் செயலர் எம்.​ சாகுல் ஹமீது,​​ மனித நேய மக்கள் கட்சி ஒன்றியச் செயலர் ஹச்.​ முஹம்மது காசீம் ஆகியோர் ​ முன்னிலை வகித்தனர்.


​ ​ ​ ​ ​ ரத்த தான முகாமை தமுமுக மாநிலச் செயலர் ஜெ.​ ஹாஜாகனி தொடக்கிவைத்துப் பேசினார்.

​ ​ ​ ​ முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.​ காளி ரத்த வங்கி மருத்துவர் சண்முகசுந்தரம் மற்றும் குழுவினர் ரத்தம் பெற்றனர்.

​ ​ ​ ​ இதில் கட்சி நிர்வாகிகள் ஜி.​ சம்சுதீன்,​​ நஜ்முதீன் வாகிதி,​​ எம்.ஆர்.எஸ்.​ முஹம்மது ​ மாலிக்,​​ எ.​ முஹம்மது இத்ரிஸ்,​​ டி.ஜி.​ ஷாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

​ ​ ​ ​ ​ முன்னதாக,​​ கிளை அமைப்பாளர் எம்.​ பசீர் அஹமது வரவேற்றார்.​ கிளைத் ​ தலைவர் ஜெ.​ முஸ்தாக் அஹமது நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online