தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 2
TN Election 2011 |
ஒரே கூட்டணிக்கு முஸ்லீம் கட்சிகள் ஆதரவு அளிப்பது பற்றி சென்ற தொடரில் பார்த்தோம்.
ஒரே கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதால் ஓற்றுமை, சகோதரத்துவம் தழைத்தோங்குவது மட்டுமின்றி இந்த தேர்தலில் கிடைத்த ஐந்து தொகுதிகளிலும் இறைவனின் அருளால் வெற்றி வாகை சூடினால் வருங்காலத்தில் இன்னும் அதிக இடங்கள் ஒரே கட்சியின் கீழ் கிடைக்க அல்லது இதைப்போன்றே இரு கட்சிகளின் வாயிலாக கிடைக்க உதவியாக இருக்கும்.
அப்படி செய்யாமல் இரு கட்சிகள் எதிரெதிர் அணிகளில் இருக்கும் பட்சத்தில் (அப்படி தான் இப்போ இருக்காங்க) கூட்டணி தர்மத்திர்க்காக தாங்கள் சேர்ந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்காக உழைப்பார்கள். அப்படி செய்தால் எதிரணியில் உள்ள முஸ்லீம் சமுதாயத்தின் மற்ற கட்சியினர் நிற்கும் தொகுதியிலும் அவர்களுக்கு எதிராக (அதாவது தாங்கள் சார்ந்திருக்கும் கூட்டணி கட்சிக்கு ஆரவாக) பிரச்சாரம் செய்வது யானை தன் கையாலே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆகிவிடும்.
அதெப்படி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யாமல் சமுதாய நலன் என்ற காரணத்திற்காக எதிரணியில் உள்ள சமுதாய வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய முடியும் என்று ஒரு கேள்வியை இங்கு வைக்கின்றனர் அரசியல் தெரிந்த சமுதாய பிரதிநிதிகள். இது மறுக்க முடியாத உண்மை, எந்த கூட்டணி கட்சி தலைவரும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார். ஆனால் சமுதாயத்திற்கு செய்யும் குறைந்தபட்ச உதவியாக முஸ்லீம் சமுதாயத்தினர் நிற்கும் தொகுதியில், எதிரணியில் உள்ள முஸ்லீம் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களின் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யாமலும், ஓட்டு கேட்காமலும் இருக்க முடியும், இதற்கு தத்தமது கூட்டணி கட்சி தலைவரின் ஒப்புதலை பெற்று செயல்படுத்த வேண்டும்.
அதாவது
முஸ்லீம் லீக் நிற்கும் தொகுதிகளில் மமக அதிமுகவிற்காக ஓட்டு சேகரிக்க கூடாது.
மமக நிற்கும் தொகுதிகளில் முஸ்லீம் லீக் திமுகவிற்காக ஓட்டு சேகரிக்க கூடாது .
இப்படி ஒரு நிலையை இரு கட்சிகளும் எடுக்குமா?
அபு நிஹான்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக