விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

வியாழன், 8 அக்டோபர், 2009

திருச்சி-ஷார்ஜா விமான சேவையை நிறுத்தக் கூடாது-அதிமுக எம்.பி.


திருச்சி: திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமான சேவையை நிறுத்தக் கூடாது என அதிமுக எம்.பி. ப. குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர், மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை இணை
அமைச்சர் [^] பிரபுல் பட்டேலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

நம் நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களோடு ஒப்பிடுகையில் திருச்சி விமான நிலையம் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் சேவையில் வியத்தகு வளர்ச்சியடைந்து வருகிறது.


கடந்த 2002-03ம் ஆண்டில் 1680 ஆக இருந்த விமானப் போக்குவரத்து எண்ணிக்கை 2008-09ல் 6 ஆயிரத்து 065 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் 2002-03ல் 93 ஆயிரத்து 810 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2008-09ல் 4 லட்சத்து 58 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி விமான நிலையம் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பயணிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகள், இலங்கைக்கும் செல்வதற்கும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நிலையில் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக ஷார்ஜா வரை செல்லும் விமான சேவையைத் திரும்பப் பெற விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். இதனால் திருச்சியிலிருந்து ஷார்ஜா, குவைத்துக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகம். சரக்குப்
போக்குவரத்து [^]ம் அதிகமாகவுள்ளது.

எனவே,
திருச்சி [^]யிலிருந்து ஷார்ஜா வரை செல்லும் விமான சேவையைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online