பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
பாபநாசம், டிச. 28: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பண்டாரவாடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் கட்சி சார்பில் பண்டாரவாடை ஊராட்சியைச் சேர்ந்த எம்.எம். கமருஜமான், பாபநாசம் ஒன்றிய அலுவலகத்தில் உதவித் தேர்தல் அலுவலர் சி. முருகனிடம் தனது வேட்புமனுவை அளித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முகம்மது செல்லப்பா, மாவட்டச் செயலர் நாசர், பொருளாளர் நசீர், கும்பகோணம் நகரச் செயலர் ஆசாத், தமுமுக மாவட்டச் செயலர் யாசீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
5 வார்டுகள் கொண்ட பண்டாரவாடை ஊராட்சியில் ஆண் வாக்காளர்கள்- 2,254, பெண் வாக்காளர்கள்- 2417 உள்ளனர். இந்த ஊராட்சியின் தலைவர் காலமானதையடுத்து, இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக