விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

புதன், 9 பிப்ரவரி, 2011

15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்


ராஜகிரி :15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
 09.02.2011 புதன்கிழமை தொடங்கி இம்மாதம் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் தங்களைப் பற்றிய சரியான தகவலை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.சு. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

நாட்டின் 15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி பிப். 9-ல் தொடங்கி 28 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இப்பணியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.

கணக்கெடுப்பின்போது தங்கள் குடும்ப விவரங்களைப் பொறுமையாக அளிக்கவும், இக் கணக்கெடுப்பு நாட்டுக்கும், தனி நபர்களுக்கும் தேவையான நலன்கள் குறித்து திட்டமிடுவதற்கு அவசியமாகும்.

இக்கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் வழக்கமாக வசிக்கும் நபர்களின் தகவல்களை மட்டும் அளிக்க வேண்டும். கணக்கெடுப்பாளர் கேட்கும் கேள்விகளான குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிறந்த தேதி மற்றும் வயது, திருமண நிலை மற்றும் அப்போதைய வயது, மதம், தாழ்த்தப்பட்டவரா, பழங்குடியினரா அல்லது மற்றவர்களா, மாற்றுத்திறன் (ஊனம்) பற்றிய விவரம், எழுத்தறிவு மற்றும் கல்வி நிலை, பொருளாதார நிலை, இடம் பெயர்ந்த விவரங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பாளரின் கேள்விகளுக்கு தரும் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

சேகரிக்கும் விவரங்கள்... :
1.பெயர்


2.குடும்பத் தலைவருக்கு உறவுமுறை


3.இனம்


4.பிறந்த தேதி


5.திருமண நிலை


6.திருமணத்தின் போது வயது,


7.மதம்


8.எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா


9.மாற்றுத் திறனாளியா


10.தாய்மொழி


11.அறிந்த பிறமொழிகள்


12.எழுத்தறிவு நிலை


13.கல்வி நிலையம் செல்பவரா


14.அதிகபட்ச கல்வி


15.கடந்தாண்டு வேலை செய்தவரா


16.பொருளாதார நடவடிக்கை வகை


17.தொழில்


18.தொழில் (அ) வியாபார நிலை


19.வேலை செய்பவரின் வகை


20.பொருளீட்டா நடவடிக்கை


21.வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா


22.பணிக்கு பயணம் செய்யும் முறை


23.பிறந்த இடம்


24.கடைசியாக வசித்த இடம்


25.இடப் பெயர்ச்சிக்கு காரணம்


26.இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம்


27.உயிருடன் வாழும் குழந்தைகள்


28.உயிருடன் பிறந்த குழந்தைகள்


29.கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை

உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்பாளர்கள் வரவில்லை என்றால் அவரவர் பகுதி வட்டாட்சியர், நகராட்சி ஆணையர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online