விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

புதன், 23 பிப்ரவரி, 2011

மாறுவார்களா இவர்கள்...? இவர்களை யார் தான் திருத்துவார்களோ

மாறுவார்களா இவர்கள்...? இவர்களை யார் தான் திருத்துவார்களோ
இந்த சீரியல் ரொம்ப பாடாய் படுத்துகிறது... காலை 10.30 தொடங்கி இரவு 10.30 வரைக்கும் இந்த சீரியல் பெயர்கள், பாருங்கள் காலை 10.30.மகள் ,11.00 மெட்டிஒலி, 11.30 கஸ்தூரி, 12.00 உறவுகள் 12.30 அனுபல்லவி,1.00 வசந்தம்,1.30 இளவரசி, 2.00 அத்திப்பூக்கள் ,2.30 ஒரு மொக்க படம் போடுவார்கள்

அதை யாரும் பார்க்க கூடாது என்பதற்காக ,மொக்க படம் போடுகிறார்கள், நல்ல படம் பார்த்தால் மக்கள் தூங்க மாட்டார்கள் அதனால் தான் மொக்க படம் போட்டு தூங்க வைத்தால் தான் மாலை 5.30 மணிக்கு சீரியல் பார்க்க முடியும் அதனால் தான் இப்படி மொக்க படம் போடுகிறாக்கள்.


ஒரு வழியா படம் முடிஞ்சி உடனே சீரியல், 5.30. பொண்டாட்டி தேவை 6.00 முந்தானை முடிச்சி, 6.30 மாதவி, 7.30 நாதஸ்வரம் 8.00 திருமதி செல்வம், 8 .30 தங்கம், 9.00 தென்றல், 9.30 செல்லமே, 10.00௦ இதயம். அப்பாடா இதை சொல்வதற்க்குள் தலை சுற்றுகிறது...

இப்படி மக்கள் ஏன் சீரியல் பைத்தியமாக இருக்கிறார்கள் தெரியவில்லை, ஒரு சிலர் காலை 10.30 டிவி முன் உட்கார்ந்தால் மதியம் 2.30 மணி வரை அவர்கள் டிவியை விட்டு அப்படி இப்படி என்று நகரமாட்டார்கள். எங்கள் வீட்டிலும் சீரியல் பார்பதற்கு என்று ஆட்கள் இருக்காங்க, அவர்கள் விளம்பரம் வரும் போது சேனல் மாற்ற கூடாது என்பார்கள். ஏன் என்றால் ஒரு நிமிடம் தவறாமல் பார்க்கவேண்டும் என்பதற்காக ...?!!

இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள், 30 நிமிடம் இந்த நாடகம் நடக்கும் என்பார்கள். நான் ஒரு முறை 30 நிமிடங்களில் எத்தனை நிமிடங்கள் நாடகம் நடக்கிறது என்று பார்த்தேன், அதில் 20 நிமிடம்தான் நாடகம். இந்த நாடகத்தில் மியூசிக் போடுவார்களே, அப்படி இருக்கும். நாடகம் முடிந்தாலும் மியூசிக் வந்து கொண்டு இருக்கும்...

நாடகத்தில் அனைத்து கிரிமினல் வேலையும் நடக்கும். கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது, பிறந்த குழந்தையை கடத்துவது, மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது,

நீங்கள் கேட்கலாம் இது எல்லாம் சினிமாவில் வரவில்லையா..? என்று அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். சினிமா என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் நாடகம் பார்த்து கொண்டு இருந்தார்கள். . நாடகம் பார்க்கிற சுவாரசியத்தில் அடுப்பில் பால் இருப்பதை மறந்து விட்டார்கள். அவ்வளவுதான் பால் பொங்கி கேஸ் அடுப்பு அணைந்து கேஸ் லிக் ஆகிகொண்டு இருந்தது. அப்போது கூட அவருக்கு தெரியவில்லை.

 பக்கத்து வீட்டிலிருந்து வந்து, " என்ன உங்க வீட்டில் கேஸ் வாடை வருகிறது" ,என்று கேட்டதும் தான் சென்று பார்த்தார்கள், பால் வைத்ததை மறந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது, அடடான்னு சொல்லிட்டு அடுப்பை அணைத்துவிட்டு வந்து மீண்டும் தொடர்ந்து சீரியல் பார்த்தார்கள்...?!! ஒருவேளை விபரீதம் ஏதும் நடந்து இருந்தால் அந்த வீட்டில் இருந்தவர்களின் கதி...?? நினைக்கவே பயமாக இருக்கிறது.

அட இப்படி பெண்கள் தான் நாடகம் பார்கிறார்கள் என்றால் இந்த ஆண்களும் பார்கிறார்கள். ஒருவர் காலையில் எங்காவது வெளியே செல்வார். அந்த வேலை முடியாமலே அவசரம் அவசரம் ஆக வீட்டுக்கு நாடகம் பார்க்கவேண்டும் என்று வந்து விடுவார். 8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவார் . வரும் வழியில் ஏதும் பார்க்க மாட்டார், யாராவது கூட போய் இருந்தால் அவர்களை விட்டு விட்டு போய் விடுவார், சாலை தாண்டும் போது வண்டி வருவதையும் பார்க்க மாட்டார். அப்படி கண்டிப்பாக நாடகம் பார்க்க வேண்டுமா என்ன..?

பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. அனைத்து சீரியல்களிலும் இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லாமல் சீரியல் இருக்கவே இருக்காது. கோலங்கள் சீரியல் விட்டா ஒரு ஜென்மம் போட்டு இருப்பாங்க அதையும் நம்ம மக்கள் பார்த்து இருப்பார்கள் கோலங்கள் சீரியலில் இந்த அபிசேக் நான்கு கல்யாணம் செய்வார்.

இந்த அத்திப்பூக்கள் சீரியலில் வாடகை தாய் மூலம் பெறப்படும் குழந்தையை....வாடகை தாய் சொந்தம் கொண்டாடுவது போல காட்டுகிறார்கள், இப்படி தவறான தகவல்களை தருகிறார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம் என்று இருப்பவர்கள் இதை பார்த்தால் அவர்களுக்கு தயக்கம் வரலாம்.

இந்த சீரியல்களில் ஒருஒருவர் மட்டும் தான் நல்லவர் மற்றவர்கள் எல்லாம் கெட்டவனுங்க .....திருமதி செல்வம் ஒரு சீரியல் இருக்கு அதல ஒருத்தர் நடிப்பார் பாருங்க அட அட என்னாமா நடிக்கிறார் அவர் ரொம்ப நல்லவர் வடிவேல் சொல்வாங்களே இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குறான். அதே மாதிரி இவரை எவ்வளவு மோசம் செய்தாலும் இவர் அவங்களை கோவப்பட்டு ஒரு எழுத்து கூட எதிர்த்து பேச மாட்டார்...

இவங்க எல்லாம் சீரியலில் தான் நல்லவங்க உண்மையில் பக்கா பிராடு பசங்க... எனக்கு தெரிந்து நாடக நடிகர்களே சீரியல் பார்ப்பது இல்லை .ஒரு நடிகை சொன்னார்கள் நான் சீரியல் டப்பிங்க செய்யும் போது பார்ப்பது தான் அதற்கு பிறகு பார்க்க மாட்டேன் சொன்னார் டப்பிங் செய்யும் போதே என்னால் பார்க்க முடியாது....என்று சொல்கிறார்கள் இருந்தாலும் நம் மக்கள் பார்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரிய சாலியாக இருப்பார்கள்..... ஒரு ஆணுக்கு ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்து சீரியல்களிலும் வரும் என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள்.

இவர்களை யார் தான் திருத்துவார்களோ

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online