விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

புதன், 30 மார்ச், 2011

பாபநாசம் தொகுதி தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?...

பாபநாசம் தொகுதி தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?...

அன்பான வாசகர்களே உங்களது மதிப்புமிக்க வாக்கு யாருக்கு?

உங்களது வாக்கினை மேற்கண்ட இணைப்பின் மூலம் வழங்குங்கள்.

முகமதுகனி (சுயே)
துரைக்கண்ணு (Admk)
ராம்குமார் (Cong)
மகேந்திரன் (Bjp)

சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது. தமிழ்நாட்டில் புயல் வீசத் தொடங்கி விட்டது – இலவசங்களின் புயல்! எதை எடுத்தாலும் 2 ரூபா என்று கூவி விற்கும் கடைக்காரரைப் போல், எதை எடுத்தாலும் இலவசம் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உங்கள் பொன்னான வாக்கு மட்டும்தான்.


கிரைண்டர் அல்லது மிக்சி இலவசம் என்கிறது ஒரு கட்சி, கிரைண்டரும் மிக்சியும் மின் விசிறியும் இலவசம் என்கிறது இன்னொரு கட்சி. ஏன்? இதையெல்லாம் இலவசமாகத் தருவதற்கு பதில் எல்லாக் கல்வியும் இலவசம் என்று அறிவிக்கலாமே! விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருளை எல்லாம் இலவசமாக்கப் போவதாகச் சொல்கிறார்களே, இலவசமாகக் கிடைத்து வந்த தொடக்கக் கல்வியைக் கூட – மழலைக் கல்வியையும் சேர்த்து – ஆயிரங்கள் கொடுத்து வாங்க வேண்டிய கடைச் சரக்கு ஆக்கியது யார்? இவர்கள்தாமே!

கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் இலவச வாக்குறுதிகள் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முனையும் ஊழல் நடவடிக்கைகளே தவிர வேறில்லை. முன்கூட்டியே மூக்குத்தி கொடுப்பதற்கும் ஆட்சிக்கு வந்தபின் அரைப்பவுண் கொடுப்போம் என்பதற்கும் என்ன வேறுபாடு?

அரை நூற்றாண்டுக்கு மேல் தில்லியில் காங்கிரசு ஆட்சி, 40 ஆண்டுக்கு மேல் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி… இத்தனைக்குப் பிறகும் பரம ஏழைகளுக்கு இலவச அரிசித் திட்டம் அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு என்ன காரணம்? இவர்களைப் பரம ஏழைகளாக்கியது யார்? மென்மேலும் பரம ஏழைகள் ஆக்கிக் கொண்டிருப்பது யார்? இதுதான் சுதந்திரமா? இதுதான் சனநாயகமா? இதுதான் குடியரசா? இதுதான் சோசலிசமா? இதுதான் திராவிடமா?

இரந்துண்பதை இழிவாகக் கருதும் தமிழினத்தை இலவசத்திற்கு வாய் பிளக்கும் பிச்சைக்காரக் கூட்டமாக மாற்றி விட்டார்களே, ஏன்?

இந்த வகையில் கருணாநிதியின் திமுகவும் ஜெயலலிதாவின் அதிமுகவும் மட்டும்தான் குற்றவாளிகளா? அவர்களது மோசடி அரசியலின் அரவணைப்பில் குளிர்காய்ந்து பதவிகளைப் பங்குபோடக் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளும் குற்றவாளிகளே அல்லவா?

ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத கூட்டணிக் கட்சிகள் மது விலக்கை வலியுறுத்துவோம், தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதி வழங்கி தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க முற்பட்டுள்ளன. பேசாமல் இவர்கள் சாதியை ஒழிக்க வலியுறுத்துவோம், பொதுவுடமைச் சமுதாயம் அமைக்க வலியுறுத்துவோம் என்று கூட வாக்குறுதி அளிக்கலாம். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு?

தமிழகச் சட்டப் பேரவை தானாகச் சட்டமியற்றும் இறைமை உடையதன்று. தமிழக அரசு என்பது அரசே அன்று. அதற்கு அரசுரிமை இல்லை. சட்டம் இயற்றத் துப்பில்லாததால்தான் இந்தக் கட்சிகள் விளக்குப் போட்டது சாதனை என்றும், விளக்குமாறு கொடுப்பது வாக்குறுதி என்றும் சொல்லி உங்களிடம் வாக்குச் சேகரிக்க வருகின்றன.

மக்களுக்கு அதிகாரம் வந்து அவர்கள் கரம் உயர்வது தேர்தலின் போது மட்டுமே. அப்போது மக்கள் ஏமந்தால் ஐந்து ஆண்டுகள் ஏமாந்ததற்குச் சமம்.


இயண்றவரை நியாயமானவருக்கு ஓட்டு போடுங்கள்... "ஓட்டுருமை என்பது பிறப்புரிமை" என்பதை நண்குணருங்கள்... தோல்வி பயத்தில் சூப்பர்ஹிட் திரைப்படங்களை சேனல்களில் போடுவார்கள்.. ஆதலால், வாக்கு போட்டு விட்டு வரும் வரை தொலைகாட்சியை பார்க்க கூடாது என்று முடிவெடுங்கள்... உங்கள் வீட்டு கற்பரசியாக வாக்குசீட்டை பேனுங்கள், அதை நல்லவர் கையில் கொடுத்து நாட்டையும், சுதந்திரத்தையும், மணிதநேயத்தை காத்தருளுங்கள்...


அன்புடன்
ராஜகிரி ஆன்லைன்

1 கருத்துகள்:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

சரியான அலசல், ஓட்டுருமையை பற்றி நீங்கள் அலசிய விதம் அருமை.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டை குட்டிசுவராக்கா போட்டி போட்டுக் கொண்டு நிற்பதை பார்த்தால் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

இவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்த கட்சியினர் தடையில்லாத மின்சாரம் தருவோம் என்று கூறவில்லை, அதுவுமில்லாமல், மின்சார தடை பற்றி ஊயாமல் அறிக்கை விட்ட அதிமுகாவும் தடையில்லாத மின்சாரம் பற்றி பேசவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது.

இட ஒதுக்கிட்டை ஒரு பொருட்டாகவே இரண்டு கட்சியினரும் மதிக்கவில்லை என்பது உச்சகட்டம். கொடுத்த 3.5% இட ஒதுக்கீட்டில் குறைகளை சரி செய்ய ஆனையம் அமைத்துவிட்டதால் முஸ்லீம்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று கலைஞரும், பிரச்சாரத்தில் இட ஒதுக்கீடு தருவோம் என்று கூறினால் ஓட்டு கிடைத்து விடும் என்று ஜெவும் முடிவெடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை. கலைஞர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது, அதிலும் பரிசீலனை சய்வோம் என்று கூறியது சாணக்யத்தனத்தை காட்டுகிறது. நாங்களும் சாணக்யத்தனத்தை காட்டுவோம் என்று ஒரு நாள் கலைஞருக்கு புரிய வைப்போம்.

அபு நிஹான்

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online