ராஜகிரியில் தவ்ஹீத் ஜமாத் பொதுக் கூட்டம்
ராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் பி.எம். இம்தியாஸ் தலைமை வகித்தார்.
ராஜகிரி,பண்டாரவாடை கிளைத் தலைவர் எம். ஷாஜஹான்,கிளைப் பொருளாளர் ஏ.ஏ. ஜாபர்அலி,கிளைச் செயலர் எம். தாலிப்அலி, துணைச் செயலர் எம். குலாம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இயக்க மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான்,மாவட்டப் பேச்சாளர் இசர்ட். நுஃமான் உள்ளிட்டோர் பங்கேற்று, சமுதாயத்தைச் சீரழிக்கும் வட்டி, இஸ்லாத்தில் ஆட்சி,அதிகாரம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.
கூட்டத்தில், ஒய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா அறிக்கையை அமல்படுத்தி கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முஸ்லீம்களுக்கு 10 சத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதத்திலிருந்து 5 முதல் 7 சதம் வரை உயர்த்த வேண்டும்.
ராஜகிரி, பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகளை முறையாக எரிய வைக்க நடவடிக்கை வேண்டும். சாலைகளைச் சீர்படுத்துதல், சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுதல், குடிநீர் வழங்குதல் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாகச் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக