விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

செவ்வாய், 24 மே, 2011

பாபநாசம் தொகுதி வாக்காளர்களுக்கு துரைக்கண்ணு எம்எல்ஏ நன்றி

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. துரைக்கண்ணு அந்தத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இரா. துரைக்கண்ணு தொகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு திறந்த ஜீப்பில் கிராமம், கிராமமாகச் சென்று நன்றி தெரிவித்தார்.


சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், இலுப்பக்கோரை, கணபதியக்ரஹாரம், பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு, கண்டக்கிரயம், ஆடுதுறை, பெருமாள்கோவில், மேட்டுத்தெரு, அம்மாபள்ளிதைக்கால், கருப்பூர்,புதுக்குடிசை, வடசருக்கை, கபிஸ்தலம், மேல கபிஸ்தலம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து துரைக்கண்ணு பேசினார்.


நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி செயலாளர் எம். கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் கே. நடராஜன், ஒன்றிய துணைத் தலைவர் ஆர். ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் எஸ். மோகன், ஒன்றிய சிறுபான்மை பிரிவுச் செயலர் ஏ. ஜாஹீர்உசேன், ஊராட்சித் தலைவர்கள் சி. முத்து, எம். செல்வராஜ், முன்னாள் ஒன்றியச் செயலர் தியாகை பழனிசாமி, தேமுதிக ஒன்றியச் செயலர் கு. மைக்கேல்ராஜ், நிர்வாகிகள் கே. முருகன், எம். நிஜார்முகம்மது, ஏ. சுரேஷ், டி. இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online